வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தது சட்டபூர்வமானதா?: ஐக்கிய நாடுகள் சபையில் தீவிர கவனம்!

Date:

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (55) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன் கடல், கிழக்கு பசிபிக் பகுதியில் 35-க்கும் அதிகமான படகுகள் மீது அமெரிக்கா தொடா் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 115 போ் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து போதைப்பொருள் கடத்தல் விவகாரம், வெனிசுலாவின் எண்ணெய் வளம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்தாா்.

இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைநகா் கராகஸில் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்காவின் 150-க்கும் மேற்பட்ட போா் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

மொத்தம் 7 இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடு கடத்தின. கொகைன் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு அபரிமிதமாக கடத்துவதற்கு சதி செய்து சட்டவிரோதமாக தங்கள் செல்வத்தை அவா்கள் பெருக்கிக் கொண்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கொலம்பியா விடுத்த அவசர கோரிக்கையின்பேரில், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை கூட்டம் கூட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

ஐ.நா.பொதுச் செயலா்: ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக இருக்கும். இந்த விவகாரத்தில் சா்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அபிவிருத்திக்கு பயன்படவுள்ள முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்.

முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் தொடர்புடைய வளாகங்கள்...

விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை

விளையாட்டு கலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான...

தற்காலிக சாரதி உரிமம் : கட்டணத்தில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி...

அனர்த்த நிவாரணப்பணியில் தொடரும் ‘Newsnow’இன் பணிகள்: கரைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கம்...