தாழமுக்கம் தீவிரமடையும் சாத்தியம்: நாட்டின் பல பகுதிகளில் 50-75 மி.மீ. வரை பலத்த மழை

Date:

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 86.00 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ. வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்று, (08) இலிருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஜனவரி 07ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...