போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

Date:

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் கடந்த 2025 அக்டோபர் 10 ஆம் தேதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, வீடுகளை விட்டு வெளியேறிய பலஸ்தீன மக்கள் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பி வந்தனர்.

ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும் இஸ்ரேல் இராணுவம் காஸாவின் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய இடங்களின் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு காசாமீதான இஸ்ரேலின் தாக்குதகளில் சுமார் 100 குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் (யூனிசெஃப்) செய்தித்தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் (13) தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் வான்வழி, ட்ரோன்கள், டேங்க் ஷெல்கள், துப்பாக்கிச் சூடு ஆகிய தாக்குதல்கள் மூலம் குழந்தைகள் கொல்லப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இத்துடன், போர்நிறுத்தம் அமலில் உள்ள சூழலில் மட்டும் இதுவரை 440-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...