நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

Date:

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்காவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் நியூயார்க் நகர மேயர் பதவிக்குப் போட்டியிட்ட 34 வயதான ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார்.

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் எழுச்சி நாயகனாக வலம்வரும் மம்தானி, நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

புத்தாண்டு நாளான இன்று  நியூயார்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார்.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.

அப்போது பேசிய மம்தானி, ”நியூ யார்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.

ஹமாஸ் ஆதரவாளராகவும், கம்யூனிச சித்தாந்தங்களை பின்பற்றுபவராகவும் அறியப்படும் மம்தானிக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...

கூடுதல் சீட் பெல்ட்களைப் பொருத்திக்கொள்ள அனுமதி: புதிய விதிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் விளக்கம்.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஆசனப்பட்டை (Seat Belt) சட்டத்தின் கீழ், ஐந்து பேரடங்கிய...

22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல ; உயர் நீதிமன்றம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...