உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்து வரும் மிகப் பெரிய இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர்.
இஸ்லாமிய வரலாறை பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலாநிதி அஸ்ஸல்லாபி அவர்களின் நூல்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த தொடரில், முஸ்லிம் சமூகத்தின் முன்னோர்களான கலீபாக்கள் மற்றும் ஸஹாபாக்கள் பற்றிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளிவருகின்றன.
இவற்றை தமிழ்நாட்டின் பிரபல அறிஞரும் திறமையான மொழிபெயர்ப்பாளருமான
மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள், தமது அழகான மொழிநடையில் மொழிபெயர்த்து
தமிழ் வாசகர்களிடம் கொண்டு வருகிறார்.
இந்த அரிய ஆக்கங்களைப் பெற்றுச் செல்ல விரும்பும் வாசகர்கள்,
சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் F57-இல் வாங்கிக் கொள்ளலாம்.
வரலாற்று ஆர்வலர்களே – இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
