2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்!

Date:

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த 2000 ரூபாய் நாணயத்தாள் பொதுமக்கள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்க உதவும் வகையில் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும்,மேலும் வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகின்றது.

மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஆறு தொட்டுணரக்கூடிய பட்டைகள் உள்ளன. புற ஊதா ஒளியின் கீழ், ஆண்டு கருப்பொருளில் ஒளிரும் இரட்டை வண்ணங்கள் மற்றும் முன்வானலை தோன்றும், மதிப்பும் தெரியும்.

இதனால் உண்மையான ரூபாய் தாள்களை இயந்திரத்தினால் அடையாளம் காண முடியும், போலி ரூபாய் தாள்களை கண்டுபிடிக்கவும் இந்த அம்சங்களைப் பயன்படுத்துமாறு மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...

Anura Meter: முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஜனாதிபதி அனுரகுமார.

'அனுர மீட்டர்' (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி,...

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மீண்டும் வேலைநிறுத்தம்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப்...

சமூக ஊடக பயன்பாடு குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களின் கணக்குகளுக்கு மோசடியாக பணத்தை மாற்றுவது மற்றும்...