78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும்.
78வது சுதந்திர தின கொண்டாட்டங்களை 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன.
