சமூக ஊடகங்கள் வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) நாளாந்தம் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இது குறித்து பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்,
உங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னர், அந்த நிறுவனம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் அல்லது தகவல்களைப் பெற்றுக்கொள்ள பணியகத்தின் 1989 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.
