சமூக ஊடக பயன்பாடு குறித்து எச்சரிக்கை

Date:

சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களின் கணக்குகளுக்கு மோசடியாக பணத்தை மாற்றுவது மற்றும் தொலைபேசி அழைப்புகள் செய்வது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வேலை வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி, பரிசுப் பரிசுகளை வழங்குவதாகக் கூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சட்ட ரீதியாக அன்றி மோசடியான முறையில் பல்வேறு கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் இடம்பெறுவது குறித்தும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்தி ஸ்கேன் குறியீடுகள் மூலம் தனிநபர்களின் Account numbers, Passwords, QR குறியீடுகள் போன்ற ரகசியத் தகவல்களைப் பெற்று இந்த மோசடிகள் இடம்பெறுகின்றமை தெரியவந்துள்ளது.

மோசடி செய்பவர்கள் வங்கி ஊழியர்களைப் போல நடித்து, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அந்தக் கணக்குகளில் பணத்தை வைப்பு செய்துள்ளதாக தெரிவித்து,

கணக்கு வைத்திருப்பவர்களை அச்சுறுத்தி, மோசடி செய்பவர்களால் வழங்கப்பட்ட பல்வேறு கணக்குகளின் ஊடாக பணத்தை மீளப் பெற முயற்சிக்கும் சம்பவங்கள் குறித்து மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொலிசார் அறிவித்துள்ளனர்.

  • உத்தியோகபூர்வ இணைய பக்கங்களை சரிபார்த்தல்.
  • வங்கி விபரங்கள், NIC Number, login details, OTP, Password, PIN, Photos  போன்றவற்றை இரண்டாம் தரப்பினருக்கு வழங்காதிருத்தல்.
  • சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகாமல் இருப்பது.
  • நம்பகமான, சரிபார்க்கப்பட்ட கணக்குகளை மட்டுமே பயன்படுத்துதல்.
  • பணத்தை வைப்பிலிடும் போது செய்யும் போது அடையாளத்தைச் சரிபார்த்தல்.
  • மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர் குற்றப் பிரிவுக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.

இதுபோன்ற மோசடிகள் குறித்து அறிவிப்பதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களை பொலிசார் அறிமுகம் செய்துள்ளனர்.

மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு: 011-2852556
மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு: 075-3994214
பிரதி பணிப்பாளர் – கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு: 011-2300638
தனிப்பட்ட உதவியாளர் – கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு: 011-2381375
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு:- 0112381058

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மீண்டும் வேலைநிறுத்தம்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப்...

2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்!

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில...

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...