டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு லண்டன் குரோலி அல் ஹுதா பள்ளிவாசலினால் நிதியுதவி

Date:

லண்டனில் குரோலி (Crawley) பகுதியில் அமைந்துள்ள அல் ஹுதா பள்ளிவாசலுக்கு  ‘முஸ்லிம் எய்ட்’ (Muslim Aid) அமைப்பின் பிரதிநிதிகள் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கௌரவமான முறையில் மீண்டும் கட்டியெழுப்பவும் முஸ்லிம் எய்ட் அமைப்பின் முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முஸ்லிம் எய்ட் அமைப்பின் சமூக நிதி சேகரிப்பு மேலாளர், இலங்கைக்கான முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் மற்றும் முக்கிய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு,  இந்தத் திட்டங்கள் களப்பணியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை எடுத்துரைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இலங்கை மக்களின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அங்கிருக்கும் பொதுமக்கள் இணைந்து 20,000 பவுண்டுகள் (£20,000) பெறுமதியான காசோலையை வழங்கினர்.

மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான பங்களிப்பிற்காக பள்ளிவாசல் கமிட்டிக்கும் மக்களுக்கும் முஸ்லிம் எய்ட் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தளம் மாவட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக சீனப் பொறியியலாளர்கள் விசேட கலந்துரையாடல்.

அண்மையில் டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்...

அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள்  செயலாளரும்...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு...

அனுஷ பெல்பிட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு...