கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து பலர் இன்னும் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறார்கள்.
இக்கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவி செய்வதை ‘நியூஸ் நவ்’ ஊடகம் தனது பங்களிப்பாக முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை அறிந்து பஹன மீடியா ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி தெல்தோட்டை – வெடக்கேபொத்த பகுதியை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குர்பானி இறைச்சிகள் வழங்கி வைக்கப்பட்டப்பட்டன.
இந்த நிவாரண பணியை பஹன மீடியா, வெடக்கேபொத்த அபிவிருத்தி மன்றம் மற்றும் நியூஸ் நவ் ஊடகம் என்பன இணைந்து ஒருங்கிணைத்தன.

