தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு மாத்தறை பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தகே தலைமையில் இடம்பெற்றது.
தென் மாகாணத்தில் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தமக்குரிய பஸ் தரிப்பிடங்களுக்கு பஸ்கள் வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் இந்த எஸ்.பீ.பஸ் கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கென குறித்த பஸ்களில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. பஸ்கள் தரித்து நிற்கும் நிலையங்கள், பஸ்கள் புறப்படுமா இல்லையா என்பது குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.
