2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக, தகவல்களை வழங்குவதற்கு பல தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின், ஐஸ் (Ice), கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும்.
புதிய நடைமுறையின் ஊடாக பொதுமக்கள் அந்தந்த பிராந்தியப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு (Divisional Officers) நேரடியாகத் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தகவல் வழங்குபவர்களின் விபரங்கள் மற்றும் தகவல்களின் ரகசியத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
