அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- பங்களாதேஷ் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு: சுற்றுலா, மருந்து உற்பத்தித்துறை குறித்து பேச்சு.

Date:

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (17) நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கை சார்பாக பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwa) சூறாவளி சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு ஈர்ப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மருந்து உற்பத்தித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடி அவர்களும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை...

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...