அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

Date:

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அண்மையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வரை தமிழ் மொழியில் வெளியாகவில்லை என விண்ணப்பிக்கத் தயாராக உள்ள தமிழ் பேசும் பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மொழிபெயர்ப்புத் தாமதம் காரணமாகத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சரியான நேரத்தில் தகவல்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ், ஊடகத்துறை அமைச்சருக்கு எழுத்துமூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த மொழிப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...