கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

Date:

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய பகுதிகளை இனங்கண்டு குறித்த பிரதேசங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் 4G பரந்த சேவை வசதிகளை வழங்கும் கிராமத்திற்கு தொலைத்தொடர்பு திட்டத்தை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் முக்கிய செயல்பாடு, செலவு பகிர்வு பொறிமுறையின் மூலம் தகவல் தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதாகும்.

தற்போது, திட்டத்தின் கீழ் சேவை வழங்குநர்களால் 83 தகவல் தொடர்பு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் கையடக்க தொலைபேசி சேவை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சேவை வழங்குநர்களின் இயக்க செலவுகள் அதிகரித்ததாலும், சில தகவல் தொடர்பு கோபுரங்களால் போதுமான வருமானம் ஈட்டப்படாததாலும் தொடர்புடைய கோபுரங்களின் கட்டுமானம் மந்தமடைந்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...