துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

Date:

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் காத்திரமான தொகுப்புக்கள் அடங்கிய ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ என்ற நூல் வெளியீட்டு விழா துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

‘இதயங்களை இணைக்கும் இப்தார்” நோன்பு துறக்கும் நிகழ்வாகவும் சமூக நல்லிணக்க ஒன்று கூடலாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் எம்..முஹம்மது நாசர் நூல் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

நிகழ்வில் துபாய் அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றதுடன் அவர்களது சார்பில் பேசிய பக்கர் சித்திகி , துபாய் மண்ணில் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நடைபெறுவது பாராட்டத்தக்கது என்றார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்வேறு துறைகளில் சமூகத்துக்காக பங்காற்றியமைக்காக பின்வருவோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

டாக்டர் அன்சாரி,பி.எஸ் அப்துர் ரஹ்மான், முஹமது பைஸ், ஏ. ஹமீத் யாசிர், ஏ.கௌசர் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். மஜக தலைவர் அவர்கள் தமிமுன் அன்சாரி இந்த விருதுகளை வழங்கி வைத்தார்.

ரமழான் கால இப்தார்கள் இது போன்ற அர்த்தமுள்ள நிகழ்வுகளாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...