நாமலின் உரையை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் யூனியன்

Date:

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் ஒக்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஸ் சங்கங்களில் நடத்தவிருந்த உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவரின் உரை தொடர்பான நிகழ்வுகளை குறித்த சங்கங்கள் ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனிலுள்ள தமிழ் மாணவ குழுக்களின் எதிர்ப்பினையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உரை நிகழ்வுகளை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ, அவரது பாரியார் உட்பட மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் லண்டன் பயணித்துள்ளனர். ஏற்கனவே கேம்பிரிட்ஜ் யுனியன் நாமலின் உரை தொடர்பான நிகழ்ச்சி திட்டமிடலை ரத்து செய்திருந்தது.

மாணவர்களின் போராட்டம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வறான உரையின் போது மாணவர்களிடமிருந்து நேரடியான, வெளிப்படையான கேள்விகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

இந்நிலையில் எதிர்ப்பு காரணமாக நிகழ்வின் நோக்கம் சரியான முறையில் நிறைவேறாது என்ற தீர்மானத்திற்கு வந்த நிலையில் நாமலின் உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...