அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேக நபர்களுக்கு கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது, நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் மோதலைத் தொடர்ந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

 

இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விரிவான விசாரணைகளின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

இலங்கையின் கொழும்புக்கும் இந்தியாவின் அகமதாபாத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குவதற்கான...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான இணையவழி உரையாடல் நாளை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்...