இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

Date:

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புத்த சாசன சபையின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றதாகவும், அதிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

மே மாதம் 01 ஆம் திகதி ‘விசா’ நட்சத்திரம் இல்லாத காரணத்தினால், அந்தத் தினத்தை வெசாக் போயா தினமாக அறிவிப்பது உகந்ததல்ல எனத் திரைனிக்காய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய மே 30 ஆம் திகதி வெசாக் தினமாகத் தீர்மானிக்கப்பட்டதாக, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...