மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் நேரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் ஒலிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
