ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு

Date:

இன்றைய தினம் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையைக் கொண்ட கப்பலொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.

அத்துடன் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையுடன் மற்றுமொரு கப்பல் 28ம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது சந்தையில் தேவையில்லாமல் எரிவாயுவை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...