கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

Date:

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ் நகரத்தில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பள்ளியைச் சோதனை செய்ததில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதியில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட 8 பேரில் உள்ள பெண்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டம்ளர் ரிட்ஜ் பள்ளி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...