‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

Date:

‘சமநீதி’ (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல் வெளிவருகிறது.

இதன் அங்குரார்ப்பண விழா நாளை, பெப்ரவரி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Idea பதிப்பகம் மற்றும் சமநீதி ஆசிரியர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், ‘அனித்தா’ பத்திரிகையின் தலைமை ஆசிரியரும் சட்டத்தரணியுமான கே.டபிள்யூ. ஜனரஞ்சன அவர்கள் பிரதான உரையினை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷூர் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய பொதுவான சஞ்சிகையாக வெளிவரும் இது, முஸ்லிம் சமூக விவகாரங்களையும் விசேட கவனத்தில் கொண்டு வெளியாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆர்வமுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...