தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

Date:

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுங்க அதிகாரிகள் கூட்டணி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் முறையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுங்க அதிகாரிகள் கூட்டணி தெரிவித்துள்ளது.

எனவே, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் சுங்க அதிகாரிகள் கறுப்பு நிற ஆடை அணிந்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும் 26ஆம் திகதி நிதி அமைச்சகம் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு உட்பட பல தரப்பினருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் இறுதியில் சுங்க தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் அடுத்த வெள்ளிக்கிழமை கூடி தங்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து மேலும் முடிவுகளை எடுப்பார்கள்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...