புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

Date:

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை) மாலை தென்பட்டதை அடுத்து, நாளை பெப்ரவரி 19, வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிறைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு ரமழான் நோன்பு தொடங்குவதில் நாடுகளுக்கு இடையே ஒரு நாள் வித்தியாசம் காணப்படுகிறது:

இன்று (18) நோன்பு தொடங்கிய நாடுகள்: சவூதி அரேபியா, ஜிபூட்டி, ஏமன், கத்தார், பஹ்ரைன், பலஸ்தீனம், சூடான், குவைத், ஈராக், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

நாளை (19) நோன்பு தொடங்கும் நாடுகள்: இலங்கை, எகிப்து, துருக்கி, துனிசியா, ஜோர்டான், லிபியா, இந்தோனேசியா, ஈரான், ஓமான், சிங்கப்பூர், சிரியா மற்றும் அல்ஜீரியா.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பை முன்னிட்டு, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவீஹ்’ தொழுகைகள் ஆரம்பமாகின்றன.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...