2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

Date:

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் வழக்கம்போல 2026 மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக “உரிமைகள். நீதி. செயல். அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக” (Rights. Justice. Action. For ALL Women and Girls) என்பதை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இந்த சர்வதேச கருப்பொருளுக்கு இணங்க, இலங்கையின் சர்வதேச மகளிர் தின தேசிய விழாவை நடத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வு ருகுணு பல்கலைக்கழகத்தின் இரவீந்திரநாத் தாகூர் மண்டபம் மற்றும் மாத்தறை கடற்கரை பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழாவின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
* பெண்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துதல்.

* நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டில் பெண்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவித்தல்.

குறிப்பாக, இந்த நிகழ்வை கொழும்புக்கு வெளியே ஏற்பாடு செய்வதன் மூலம், கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண்களை கௌரவித்தல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.

தேசிய கருப்பொருள், உத்தியோகபூர்வ இலச்சினை (Logo) மற்றும் நிகழ்ச்சி நிரல் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான்...

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத்...