17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மாணவர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்கு சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் இன்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் சான்றளிக்கப்பட்ட, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
