இராணுவம் மற்றும் பொலிஸார் மீது நன்மதிப்பு: டிட்வா நிவாரணம் குறித்தான மக்களின் கருத்துக்கணிப்பு

Date:

சமூக விஞ்ஞானிகளின் சங்கத்தினால் (SSA) கடந்த டிட்வா புயலின் பின்னர் இடம்பெற்ற நிவாரணப் பணிகள் தொடர்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கணிப்பு இதற்கென பெறப்பட்டது.

இதற்கமைய அரசு குறித்த அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை 74.4 வீதமானோர் வரவேற்றுள்ளனர். நிவாரண திட்டங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறித்தான கருத்துக்கணிப்பில் 78.7 வீதமான மக்களின் வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை முப்படையினர் மற்றும் பொலிசாரின் நிவாரணப் பணிகள் விடயத்தில் இராணுவத்தினருக்கு 91.2 வீதமானோரும் பொலிசாருக்கு 84.6 வீதமானோரும் தமது வரவேற்பை வழங்கியுள்ளனர்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பணிகளுக்கு 45.8 வீதமானோர் தமது பாராட்டை வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு 23.7 வீதமானோரே தமது வரவேற்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...