கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Date:

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) ஆரம்பமாகின்றன.

பரீட்சைகள் இன்று (17) முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே குறித்த நிலையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும், நிலவும் காலநிலை மாற்றம் அல்லது ஏதேனும் அனர்த்தங்கள் காரணமாக பரீட்சார்த்திகள் நிலையங்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

  • அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்: 117

  • பரீட்சைத் திணைக்களம்: 1911

  • தேசிய பரீட்சை அவசர செயல்பாட்டு பிரிவு: * 0113 668 010, 0113 668 013, 0113 668 020, 0113 668 100, பரீட்சை காலப்பகுதியில் காலநிலை பாதிப்புகளைத் தவிர்ப்பது தொடர்பான முழுமையான வழிகாட்டி ஆவணத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் (www.dmc.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...

AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit...

அடுத்த சில நாட்களுக்கு மழை பொழிவு அதிகரிக்கும்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா...