பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான இணையவழி உரையாடல் நாளை?

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் கருத்து சுதந்திரத்திற்கு சவாலாகுமா? என்பது குறித்த விசேட இணையவழி கலந்துரையாடல் நாளை (12) இரவு 8 மணிக்கு Zoom ஊடாக நடைபெறவுள்ளது.

நாட்டில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் பல்வேறு மட்டங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அது குறித்த தெளிவான சட்ட ரீதியான பார்வையை முன்வைப்பதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

இந்த முக்கியத்துவமிக்க உரையாடலில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான வசீமுல் அக்ரம் கலந்துகொண்டு விசேட விரிவுரையை நிகழ்த்தவுள்ளார்.

சட்டமூலத்தில் உள்ள சிக்கல்கள், அது எவ்வாறு கருத்து சுதந்திரத்தை பாதிக்கக்கூடும் மற்றும் அதில் அடங்கியுள்ள சட்ட நுணுக்கங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் இணைந்துகொள்வதற்கான Zoom இணைப்பு விபரங்களை ஏற்பாட்டாளர்கள் விரைவில் பகிர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...