இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.

Date:

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) நிரந்தர பிரதிநிதிகள் குழு சார்பில் உயர்மட்டக் குழு விவாதம் நடைபெற்றது.

ஐநா பொதுச்சபையின் தீர்மானம் 76/254-ன் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க்  மற்றும் OIC பொதுச்செயலாளர் ஹிசைன் பிராஹிம் தாஹா  (சிறப்புச் செய்தி வாயிலாக) உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் மத பன்முகத்தன்மை மீதான மரியாதையை உலகளாவிய கலாச்சாரமாக வளர்த்தெடுத்தல்.

வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைப்பதும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் இந்த சந்திப்பின் முதன்மை இலக்காக அமைந்தது.

2022-ஆம் ஆண்டு ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15-ஆம் திகதி “இஸ்லாமிய வெறுப்புணர்வை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினமாக” கடைபிடிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...