ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

Date:

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க யுத்த விவகார செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார்.

“சர்வதேச கடல் பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் அழித்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த “ஐஆர்ஐஎஸ் டெனா” கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இதுவரை பின்வரும் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலில் மிதந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவை மேலதிக பரிசோதனைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 32 பேர் கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...