உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

Date:

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை மறுத்து, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“எச்சரிக்கையாக இருங்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தை கோருகின்றோம்” எனும் தலைப்பில் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது போல் அமைந்துள்ள இந்தச் செய்தி, எந்த வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்துவதாக இருந்தால், அது பொலிஸ் ஊடகப் பிரிவினால் முறையான கடிதத் தலைப்பின் (Letterhead) கீழ் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

பொலிஸாரின் தினசரி செய்திகள் மற்றும் அறிவிப்புகள் அவர்களது அதிகாரப்பூர்வ Facebook பக்கம் மற்றும் YouTube அலைவரிசை ஊடாக உடனுக்குடன் பதிவேற்றப்படும்.

பொலிஸ் இலச்சினை அல்லது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்புவது ஏதேனும் திட்டமிட்ட செயலா என்பது குறித்து கண்டறிய ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற பதிவுகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...