இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள 204 பேரைக் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், கப்பல் பணியாளர்களை தரையிறக்கிய பின்னர், ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஒரு நாடு என்ற ரீதியில் நடுநிலைமையைப் பாதுகாத்து, மனிதநேயத்திற்கு முதலிடம் கொடுத்துச் செயற்பட ஒருபோதும் தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
