சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

Date:

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை அடுத்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் குறிப்பிடத்தக்க திருத்தத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசலின் விலை லிட்டருக்கு 22 ரூபா அதிகரித்து ரூ.303 ஆகவும், சூப்பர் டீசல் லிற்றருக்கு 24 ரூபா அதிகரித்து 353 ரூபாவாகவும் உள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் 24 ரூபாவும் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் 25 ரூபாவாகும் அதிகரித்து, புதிய விலைகளின்படி  முறையே 317 ரூபா மற்றும் 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

அதேநேரம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 13 ரூபா அதிகரித்து 195 ரூபாவா உள்ளது. இதற்கிடையில், சிபெட்கோ விலைகளுக்கு ஏற்ப லங்கே ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.

 

திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு:

ஒட்டோ டீசல் – 303 ரூபா  (22 ரூபா அதிகரிப்பு)

சூப்பர் டீசல் – 353 ரூபா  (24 ரூபா அதிகரிப்பு)

ஒக்டோன் 92 பெற்றோல்– 317 ரூபா  ( 24 ரூபா அதிகரிப்பு)

95 ஒக்டேன் பெற்றோல் – 365 ரூபா (25 ரூபா அதிகரிப்பு)

மண்ணெண்ணெய்– 195 ரூபா (13 ரூபா அதிகரிப்பு).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...