தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

Date:

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health Survey) இன்று (10) ஆரம்பிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் வாய்வழி சுகாதார நிலவரங்கள் குறித்துப் புரிந்துகொள்வதற்காக, குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவிலான வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய, இன்று (10) முதல் நவம்பர் மாதம் வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (Randomly selected) 10,000 பேரிடம் தரவுகளைச் சேகரிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் பாடசாலை மாணவர்களுக்கான தரவுகள் பாடசாலை வளாகங்களுக்குள்ளும், பெரியவர்களுக்கான தரவுகள் வீடுகளுக்குச் சென்றும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதன்போது வாய்வழி சுகாதாரம் தொடர்பான வினாக்கொத்துக்களைப் பூர்த்தி செய்வதுடன், வாய்வழி சுகாதாரப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் எதிர்கால சுகாதாரத் திட்டமிடல்களுக்கு மிகவும் அவசியமானவை என்பதால், வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்கு வருகை தரும் மருத்துவக் குழுவினருக்குப் பொதுமக்கள் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...