புதிய வக்ஃப் சபை நியமனம்: அவசரகால நியமனங்களைத் தவிர்த்து நடுநிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

Date:

புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள சூழலில், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் சிராஜ் மஷுர் தனது முகப்புத்தகத்தில் முக்கியமான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து சில கருத்துகளைப் பகிர்வது அவசியம். நாட்டிலுள்ள பள்ளிவாசல்களையும் பல கோடிகள் பெறுமதியான வக்ஃப் சொத்துகளையும் ஒழுங்குமுறைப்படுத்தும் உயரிய சபை இது.

இதன் விடயப் பரப்புக்குள் பல புதிய அணுகுமுறைகளும் மாற்றங்களும் தேவை.

பல இடங்களில் வக்ஃப் சொத்துகளை செல்வாக்குள்ள சிலர், முறைகேடாக கையகப்படுத்தியுள்ளனர்.

இவை மீட்கப்பட வேண்டும். இதற்கு சட்டத் திருத்தம் தேவையாயின் அதுவும் செய்யப்பட வேண்டும்.

அத்தோடு, கடந்த காலத்தில் இயங்கிய வக்ஃப் சபைகள் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அடிக்கடி வெளிவந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில் புதிய வக்ஃப் சபை நியமனத்தின்போது, பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

1. தகுதியான நபர்களை நியமிப்பதற்கு ஏற்ற தெரிவு அளவுகோல் (Selection Criteria) ஒன்று வகுக்கப்பட வேண்டும்.

2.துறைசார்ந்தோர் உள்ளடக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, குறைந்தபட்சம் ஒரு மார்க்க அறிஞர், ஒரு சட்டத்தரணி, ஓய்வுபெற்ற நீதியரசர், கணக்காளர், மத்தியஸ்த அனுபவமுள்ளவர்/ பிணக்குத் தீர்ப்போர் (Experience in Mediation & Conflict Resolution) …

3.முஸ்லிம்களின் உள்ளக சிந்தனைப் போக்குகளை/ உள்ளகப் பன்மைத்துவத்தைப் பிரதிபலிப்போர்.

4.புவியியல் ரீதியாக பல பிரதேசத்தவர்கள் கலந்திருத்தல்.

5.பக்கச் சார்பில்லாது, சமநிலையோடு விடயங்களை அணுகக் கூடியவர்கள்.
இவற்றைக் கணக்கிலெடுக்காது, அவசர கதியில்- Ad hoc ஆக- புதிய சபை அமைக்கப்படுவது பொருத்தமாக அமையாது.
மேலும், அதுவே காலவோட்டத்தில் புதுப் பிரச்சினையாக மாறி விடும்.
-சமூக செயற்பாட்டாளர் சிராஜ் மஷுர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...