மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Date:

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

UL253/UL254 (கொழும்பு–தமாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா) மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய விமானச் சேவைகள் 2026 மார்ச் 28 இவரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள், புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக விமான நிலவரங்களைத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் உதவிக்குத் தங்களது உலகளாவிய தொடர்பு மையத்தையோ அல்லது தத்தமது பயண முகவர்களையோ தொடர்புகொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...