வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வளர்பிறை’ சஞ்சிகை வெளியீட்டு விழா

Date:

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ‘வளர்பிறை’ ஆண்டுச் சஞ்சிகையின் அங்குாரார்ப்பண வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஏ.ஜி.ஏ. ஹபீல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, பாடசாலை மாணவர்களின் கல்விப் பயணத்திலும் கலை இலக்கிய முயற்சிகளிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அத்துடன், இந்தச் சஞ்சிகையின் முதலாவது இதழாசிரியராக பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியை ஆர்.எப். ருமைஸா அவர்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...