விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

Date:

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பஸ் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். நாட்டின் பொது போக்குவரத்து துறையில் விசேட தேவையுடையவர்களுக்கான போக்குவரத்து உரிமைகளை வழங்கும் வகையில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக் காலமும் இதுபோன்றதொரு சந்தர்ப்பம் குறித்த சமூகத்தினருக்கென பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சக்கரை நாற்காலி பயன்படுத்தும் விசேட தேவையுடையவர்கள் இலகுவாக ஏறக்கூடிய வகையில் 430.7 மில்லியன் ரூபா செலவில் பிரத்தியேக மிதி பலகையைக் கொண்டதாக இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட குறித்த 10 பஸ் வண்டிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட குறித்த பஸ் வண்டிகள் மெட்ரோ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...