அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

Date:

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

கடந்த ஐந்து நாட்களாகவே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் உலகளவில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இராணுவத்தின் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் அலி அயத்துல்லா கமேனி, இராணுவத் தளபதி உள்பட 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக அமெரிக்காவுக்கு இராணுவ உதவிகளை மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது.

இந்தத் தாக்குதலில் சவூதியின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் தலைமையகம், மத்திய கிழக்கின் மிகப் பெரிய அமெரிக்க தளம் அமைந்துள்ள கத்தாரின் அல்- உதெயித் விமானப் படைத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலெம் படைத் தளம், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்களின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தின.

இதில், ஈரானின் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக, அமீரகம், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், சுமார் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலில் அமீரகத்தில் உள்ள அமேசானின் தரவுகள் மையமும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது.

அமேசான் வலைதள சேவைகளின் தரவு மையங்களில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு உள்ள வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் செயலிழந்தன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்களும் , பஹ்ரைனில் உள்ள மையமும் டிரோன் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்ததாகவும், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அமேசான் வலைதள சேவைகள் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...