சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
நாளை (மார்ச் 06) வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும்.
மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’ (Heat Index), இந்த 5 மாவட்டங்களின் சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது அல்லது உடல் உழைப்பில் ஈடுபடும்போது சோர்வை (Fatigue) உணரக்கூடும். மேலும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசையிழுவு அல்லது தசைப்பிடிப்பு (Heat cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
