இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள், இன்று (16) எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் ஊடாக மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் குழுவினர் இன்று (16) துபாய் ஊடாக கொழும்பு விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர்.
