ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

Date:

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு கருத்திட்டப் பத்திரமொன்றை ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

விஷேட நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இக்கருத்திட்டப் பத்திரத்தை இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவர் பிரியான் ஆர்.விஜயபண்டார ஊடக துறைப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னாவுக்கு ஊடக அமைச்சின் கேட்போர் கட்டத்தில் கையளித்தார்.

சிரேஷ்ட ஊடகவியளார்கள், நிருவாகத்துறை உயரதிகரிகள், வெகுஜனத் தொடர்பு மற்றும் ஊடகத்துறைசார் வல்லுனர்கள், சட்ட அறிஞர்கள் துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய  குழுவினரால் இக்கருத்திட்டப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது –

இவ்வைபவத்தின் போது கருத்துத் தெரிவித்த ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் கலாநிதி ஆரியரத்ன. இலங்கைப் பத்திரிகைப் பேரவை களைக்கப்பட இருப்பதுடன் அதற்குப் பதிலாக பல்வேறு தரப்புகளின் கருத்துக்கள் பெறப்பட்டு சுயாதீன ஊடக ஆணைக் குழு அமைப்பதுடன் அது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் விரைவாகவும் அமைப்பது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.

சுதந்திர ஊடக அமைப்பும் இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(ஹில்மி முஹம்மது)

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...