QR குறியீடுகளின்றி சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு 119 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விலக்கமூடாக முறைகேடுகளை முறையிட முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு வுட்லர் தெரிவித்தார்.
எரிபொருள் வழங்குவதில் நிலவும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, தற்போது பொலிஸ் நடமாடும் ரோந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
