முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
