நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

Date:

இன்றையதினம் (17) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மொணராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின்...

எரிபொருள் விநியோக முறைகேடுகளுக்கு 119 தொலைபேசி வசதி

QR குறியீடுகளின்றி  சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு   119...

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...