புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்

Date:

நேற்றைய தினம் புத்தளம் – கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில் பள்ளிவாசல் தலைவர் உட்பட நால்வர் பிறை கண்டதாக அறிவித்தனர்.

எனினும், அங்கு பிறை தெரிவதற்குச் சாத்தியமில்லை எனத் தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு, அந்தச் சாட்சியங்களை நிராகரித்தது. இதனால் நாடு முழுவதும் ஒருவிதமான குழப்பநிலை நிலவி வருகின்றது.

இந்த விவகாரம் குறித்து மாநகரசபை உறுப்பினர் அர்கம் முனீர் எழுப்பியுள்ள 8 காரசாரமான கேள்விகள்:

1. பிறை இன்று வெற்றுக்கண்களுக்குத் தென்பட வாய்ப்பே இல்லை என்றால் “பிறை கண்டால் அறிவியுங்கள்” என்று மக்களிடம் பிறைக்குழு கேட்டிருக்கக் கூடாது. நேரடியாக மஃரிப் அதானுடன் சனிக்கிழமை பெருநாள் என்று அறிவித்திருக்கலாம்.

2. இல்லை, குறிப்பிட்ட நேர எல்லைக்குள் மாத்திரமே பிறை தென்பட வாய்ப்புள்ளது என்றால், தெளிவாக “இந்த நேர எல்லைக்குள் பிறை கண்டதாக அளிக்கப்படும் சாட்சியங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும்” என்று மக்களிடம் அறிவித்திருக்க வேண்டும்.

3. “வானிலையைக் கருத்திற்கொண்டு குறைந்தது இருவேறு இடங்களில் இருந்து சாட்சியமளிக்கப்பட்டால் மாத்திரமே ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு இடத்தில் கண்டதாக குறிப்பிட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றாலும் அதனை மக்களிடம் தெளிவாக முன்கூட்டியே பிறைக்குழு அறிவித்திருக்க வேண்டும்.

4. பிறை கண்டதாக புத்தளத்தில் இருந்து சாட்சியமளித்தவர்கள் “பொய்யர்கள் அல்லர்” என்று தெளிவாக குறிப்பிடுகின்றது பிறைக்குழு. அவ்வாறென்றால் அவர்களுடைய சாட்சி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சி.

5. பிறை கண்டதாக புத்தளத்தில் இருந்து சாட்சியமளித்தவர்களின் சாட்சியை வலிதற்றதாக நிறுவுவதற்கு பிறைக்குழு முன்வைக்கும் விளக்கம் பல்வேறு சந்தேகங்களை உண்டுபண்ணுகிறது. “அவர்கள் வேறு பிறைகளை (?) கண்டிருக்கலாம். குறிப்பாக அவர்கள் கண்டது வீணஸ் (Venus) பிறையாகக்கூட இருக்கலாம்” என்பது வானியல் விஞ்ஞானத்திற்கு முற்றிலும் முரணானது.

வீணஸ் (வெள்ளி), சந்திரனோடு ஒப்பிட்டால் மிகத் தொலைவில் உள்ள வெற்றுக்கண்ணுக்கு ஒரு புள்ளி போன்று தெரியக்கூடிய ஒரு கோள். பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரம் 384,400 km. பூமியிலிருந்து வீணஸுக்கான மிக அருகிலான தூரம் அண்ணளவாக 38 மில்லியன் km.

அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட ஆகக்குறைந்தது 100 மடங்கு தூரத்தில் இருக்கிறது வீணஸ் கோள்.

“அவர்கள் பிறையினை பார்த்ததாக கூறும் நேர எல்லை, வெற்றுக் கண்களால் பிறை காணக்கூடிய சாத்தியமான நேர எல்லைக்குள் இல்லை” என்றாவது கூறி இருந்தால் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்.

6. இவ்வாறான தொடர்ச்சியாக ஒன்றுக்கொன்று முரணான செயற்பாடுகள் மக்களிடம் இவ்வாறான நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை இழப்பதற்கு வழிகோலும்.

7. நாளை நோன்பு நோற்பதா? பெருநாள் கொண்டாடுவதா? இல்லை நோன்பும் நோற்காமல் பெருநாளும் கொண்டாடாமல் இருப்பதா? என்று எழும் குழப்பங்களைத் தவிர்க்க பிறைக்குழு தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக இது போன்ற முரண்பட்ட முடிவுகள் எடுக்கப்படுவது, மக்கள் மத்தியில் இவ்வாறான மார்க்க நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்யும்.

கடந்த காலங்களில் ஸஹர் நேரத்தில் கூட முடிவுகள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்ட அனுபவங்கள் நமக்கு உண்டு. எனவே, சமூகத்தின் குழப்பத்தைத் தவிர்க்க பிறைக்குழு தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அர்கம் முனீர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள்...

வரலாற்றில் முதல்முறையாக ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் – 35 விமானம்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத்...

QR பிரச்சினைகள் தொடர்பில் புதிய உதவிச் சேவை

தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச்...

நாட்டில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம்...