இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

Date:

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி சபைப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதிகளவான கடன் தொகை 2028ஆம் ஆண்டிலேயே செலுத்தப்பட வேண்டும் எனப் பலரும் கூறி வந்தாலும், 2025ஆம் ஆண்டில் 3900 மில்லியன் டொலர் கடன் தவணையைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், 2028ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய தொகை 3.2 மில்லியன் டொலர் மாத்திரமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 2100 மில்லியன் டொலர் முதல் 2200 மில்லியன் டொலர் வரை செலவிடப்பட்ட போதிலும், 1700 மில்லியன் டொலர் மேலதிக இருப்பை (Surplus) பதிவு செய்ய அரசாங்கம் முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 29,300 மில்லியன் டொலர் வருமானத்தில், 27,600 மில்லியன் டொலர் மாத்திரமே செலவிடப்பட்டமையினால் இவ்வாறானதொரு மேலதிக இருப்பை எட்ட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...